மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை: 8 மணி நேரம் கழித்து சுடுகாட்டில் உயிர் பிழைத்த அதிசயம்!!

158

பிரேசிலில் இறந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பிறந்த குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.கனரனா நகராட்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அந்த குழந்தை இறந்து விட்டதாக எல்லோரும் நினைத்துள்ளார்கள்.

இதையடுத்து அருகிலிருந்த சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு அடக்கம் செய்யப்பட்டது.பின்னர், அப்பகுதியில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் 2 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து உயிருடன் இருந்த பெண் குழந்தையை மீட்டார்கள்.

பின்னர் உடனடியாக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.