12 அடி நீள முதலை வயிற்றில் ஒரு பெண்ணின் கை: பாதிக்கப்பட்ட பெண் பலியாகி இருக்கலாம் என அச்சம்!!

592

அமெரிக்காவில் மனிதர்கள் நடமாடும் பூங்கா அருகே 12 அடி நீள முதலையின் வயிற்றில் ஒரு பெண்ணின் முழுக்கைகள் அறுவை சிகிச்சை மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டேவி யில் உள்ள சில்வர் ஏரி ரோட்டரி பார்க் பகுதியில் தனது நாய்களை நடைப்பயிற்சிக்கு கூட்டிக் கொண்டு வந்த பெண்ணை அந்த ஏரியில் இருந்த முதலை நீருக்குள்ளே இழுத்திருக்கிறது.

இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் உடனடியாக 911 ற்கு அழைத்திருக்கிறார்.காலை 9.45 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக தேடிய போது அந்நீரில் முதலை மட்டுமே நீந்தி வருவதையும் பெண்ணை காணவில்லை என்பதையும் அறிந்து கொண்டனர்.

பெண்ணை நீரில் மூழ்கி தேட வேண்டும் என்றால் முதலை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக அந்த முதலையை வலை வைத்து பார்க் ஊழியர்கள் பிடித்தனர். அப்போது அந்த முதலையை அறுவை சிகிச்சை செய்த போது அதன் வயிற்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழுக்கை ஒன்று கிடைத்திருக்கிறது.

அந்தக் கைகள் பாதிக்கபட்ட பெண்ணின் கைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில் கைகளில் நாய்கள் வைத்திருந்த பெண் ஒருவரை முதலை நீருக்குள் இழுத்ததை பார்த்தேன். அதன் பின் பெண்ணை காணவில்லை. நாய்கள் ஏரியின் கரையில் நகராமல் ஏரியையே பார்த்து சப்தமிட்டு கொண்டிருந்தன என்று கூறினார். இரண்டு நாய்களில் ஒரு நாய்க்கு முதலையால் கடிபட்ட காயங்கள் உள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் பெயர் மாட்சுகி எனவும் அவரது வயது 47 எனவும் தெரிய வந்துள்ளது. வெளியூர் சென்றிருக்கும் கணவருக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நியூயார்க்கில் இருக்கும் அவரது மகனுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்சுகியின் மற்ற உறவினர்கள் மற்றும் சகோதரர் பாதிக்கப்பட்ட பகுதியில் நின்று மாட்சுகி பற்றி தகவல் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாட்சுகி வழக்கமாக இந்த பார்க்கில் அதிகம் தனது நாய்களோடு தென்படுவார் என்று அங்குள்ளோர் கூறினர். சம்பந்தப்பட்ட முதலையை கடந்த வாரத்தில் இருந்தே பலர் பார்த்துள்ளனர். இருப்பினும் பூங்கார் ஊழியர்களின் கவன குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்க படுகிறது.

மக்கள் நடமாடும் பார்க்கில் இது போன்ற ஆபத்தான விலங்குகள் வசிப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.