அஜித் படத்தின் பின்னால் சுவாரசியம் !!

703

அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் Favourite ஆன படங்கள் என சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதையும் தாண்டி அஜித்தின் சில படங்களுக்கு முக்கிய அம்சங்கள் இருக்கும்.

அப்படியான ஒரு படம் தான் தீனா. அஜித் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் கொண்டாடுவதற்கு காரணங்களும் உண்டு. முருகதாஸ் இயக்கிய இப்படத்தால் அஜித்திற்கு தல என ஒரு ஸ்பெஷல் அடையாளம் கிடைத்தது.

இது இயக்குனர் முருகதாஸின் நண்பர் அடிக்கடி சொல்லும் வார்த்தையாம். அதை தான் அவர் இப்படத்தில் பயன்படுத்தினாராம். அது மட்டுமல்ல சில முக்கிய வசனங்களை முருகதாஸ் தீனாவில் வைத்திருப்பார்.

அதுமட்டுமல்ல இந்த படக்கதை விஜய்க்கு போய் வந்து, பின் அஜித்தை தேடி வந்தது பலருக்கும் நினைவிற்கு வரும் தானே.