மதுவில் தூக்க மாத்திரை கலந்து கணவன் கொலை: மனைவியும் கள்ளகாதலனும் கைது!!

140

விழுப்புரம் சின்னசேலம் தகரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது விவசாய நிலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மணிகண்டனுக்கு ரஞ்சிதா என்கிற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இத்தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின்னாக ரஞ்சிதா பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மேலும் இதுபற்றி விசாரித்தனர்.

பொலிஸ் விசாரணைப்படி மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதன்பின் ஆறுமுகம் அடிக்கடி ரஞ்சிதாவுடன் பேசிவந்தார். பேச்சு கள்ளகாதலாக மாறியது.

இதனை மணிகண்டன் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரிடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் திரும்ப வாங்கியிருக்கிறார். மேலும் இதுபற்றி காவல்துறையினரிடமும் புகார் அளித்திருக்கிறார்.

இதனால் ஆறுமுகத்தை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அதன்பின் சிறைக்கும் அனுப்பப்பட்டான் ஆறுமுகம்.

ஜாமினில் வெளிவந்த ஆறுமுகம் மீண்டும் ரஞ்சிதாவோடு தவறான உறவில் ஈடுபட்டான். இதனை மீண்டும் கடுமையாக கண்டித்திருக்கிறார் மணிகண்டன். என்ன ஆனாலும் கள்ளகாதலனோடு வாழ வேண்டும் என்று முடிவு செய்த ரஞ்சிதா மணிகண்டன் அருந்தும் மதுவில் சில தூக்க மாத்திரைகளை சேர்த்தார். மது அருந்திய உடன் மயக்கமடைந்த மணிகண்டனை ரஞ்சிதா, ஆறுமுகம் மற்றும் மற்றொரு 18 வயது பையன் ஆகியோர் தலையணை முகத்தில் அமுக்கி கொலை செய்தனர்.

அதன்பின் உடலை அவரது நிலத்தில் விட்டு விட்டு வந்ததாக கூறினார்.

உண்மைகளை ஒப்பு கொண்ட ரஞ்சிதாவையும் ஆறுமுகத்தையும் 18வயது பையனையும் பொலிஸார் கைது செய்தனர்.

தாயின் கள்ளக்காதல் காரணாமாக தற்போது தந்தையையும் இழந்த அவர்களது குழந்தைகள் தனுஷ் (9) மற்றும் ஆர்த்தி (3) நிர்கதியாக நிற்பது பார்ப்பவர் மனதை பிசைகிறது.