விவாகரத்து செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகர் நடிகைகள்!!

169

தமிழ்சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட துணையை வெகு விரைவாக விவாகரத்து செய்துள்ளார்.விவாகரத்து ஆன பின்னர் சிலர் தனியாக வாழ்ந்தாலும் பலர் மறுமணம் செய்து கொண்டுள்ளார்கள்.அப்படி விவாகரத்து செய்த சில முக்கிய நடிகர், நடிகைகள் குறித்து காண்போம்.

அமலா பால் – ஏ.எல் விஜய்:இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

விந்தியா – கோபி:பிரபல நடிகை விந்தியா சில ஆண்டுகளுக்கு முன்னர் கோபி என்ற கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார்.சில காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் திருமண வாழ்வில் பிரச்சனை தோன்றிய நிலையில் கணவரை பிரிந்தார் விந்தியா.

ஊர்வசி – மனோஜ் கே விஜயன்:தமிழில் பிரபல நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி தனது கணவர் மனோஜ் கே.விஜயன் கொடுமைப்படுத்துவதாக கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை முறையிட்டு விவாகரத்து பெற்றார். பின்னர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி.

பிரகாஷ்ராஜ் – லலிதா குமாரி:நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகள்களும், மகனும் உள்ள நிலையில், தனது முதல் மனைவியை 2009ல் விவாகரத்து செய்து விட்டு, 2010ம் ஆண்டு போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திக் – ராகின்:நவரச நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினை மணந்து பின் அவரது சகோதரியான ரதியை 1992ல் திருமணம் செய்துகொண்டார்.

ராதிகா – பிரதாப் போத்தன்:1985ம் ஆண்டு இயக்குனர் பிரதாப்பை திருமணம் செய்து கொண்டார் ராதிகா. அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின் 1990ம் ஆண்டு ரிச்சர்டு கார்டி என்பவரை லண்டனில் திருமணம் புரிந்து 92ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு, 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார்.