இன்றைய நாளுக்கான ராசிபலன் (17-06-2021) உங்களுக்கு எப்படி ?

652

இன்றைய ராசிபலன்…………………..

மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்துஉதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: நண்பர்கள் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போதுயோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் இழந்தசெல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். முன்கோபத்தால் பகைஉண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின்ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரிபாராட்டுவார். சிறப்பான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஓங்கும். முயற்சிகள் ப.லி.தமாகும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல் லும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்து இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிர்ஷ்டம் உண்டாகும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உய ரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சிலர் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அமோகமான நாள்.