திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற இளம்பெண்: திடுக்கிடும் சம்பவம்!!

116

இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன் சில மாதங்களுக்கு முன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் சகிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அஜய் அவருடனான தொடர்பை திடீரென நிறுத்தி கொண்டார்.இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஜய்யிடம், சகி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அஜய் மறுத்துவிட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் ரயில்வே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அஜய் உயிரிழந்த நிலையில் சகி தான் அஜய்யை கொலை செய்ததாக அவரின் தாய் பொலிசில் புகார் அளித்தார்.இதையடுத்து அஜய்யை கொன்றதாக சகி மற்றும் அவர் ஆண் நண்பர் பிஸ்வாஜித்தை பொலிசார் கைது செய்தனர்.இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.