10-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள்: பெற்றோர் அதிர்ச்சி!

106

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று விளையாடச் சென்ற கார்த்திக் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில், கார்த்திக் ரத்தகாயங்களுடன் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரிவித்ததுடன், பெற்றோருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து அங்கு சென்றுள்ளனர்.அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மாணவனை பார்த்த போது, அவனின் உடல் அருகே ரத்தகறையுடன் வாலி ஒன்று இருந்துள்ளது.

இதனால் மாணவன் கொடூர முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பொலிசார் உறுதி செய்தனர். இதையடுத்து மாணவனின் உடலை கைப்பற்றிய பொலிசார் இந்த கொலையை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.