ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தை: சீன முதியவரின் சாகசச் செயல்!!

69

சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை முதியவர் ஒருவர் மீட்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு வயதான அந்தக் குழந்தை மாடியில் விளையடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டான்.அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் அவன் சத்தமிட்டவாறே தொங்கிக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட Zhang Xin என்னும் முதியவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.

பாராட்டுகள் குவியும் நிலையில், முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.

இதேபோல் பிரான்ஸில் Gassama என்பவர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.

Zhangஐயும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது.