உயிர் தோழியால் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

378

நாகேஸ்வரி…

தமிழகத்தில் திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்து கொண்டதன் அதிர்ச்சி பின்னணி வெளிவந்துள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் மணிகண்டன் (27) இவர் ஹொட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் ஆரணி ஆகும். கடந்த மே மாதம் மணிகண்டனுக்கும், வேலூரைச் சேர்ந்த நாகேஸ்வரி (21) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு நாகேஸ்வரியின் அம்மா செண்பகவல்லிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, நாகேஸ்வரி, அவரை கவனிக்க திருமணமான பத்தே நாளில் வேலூருக்கு சென்றுவிட்டார். இதன் பிறகு, கடந்த 16ம் திகதி மணிகண்டன், நாகேஸ்வரி ஆகிய இருவரும் ஆவடியில் புதியதாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

பின்னர், நேற்று முன்தினம் காலை மணிகண்டன் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓட்டல் வேலைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு வீட்டின் உரிமையாளர் காயத்ரி என்பவர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் நாகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மணிகண்டனுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

இதன்பிறகு, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினார்கள். தாய் செண்பகவல்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், நாகேஸ்வரி திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செய்து கொண்டார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரி தனது உயிர் தோழி மீனாவுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார் இவர்கள் இருவரும் ஒரே துணிக்கடையில் பணியாற்றியவர்கள். பின்னர் நாகேஸ்வரியின் தாயார் செண்பகவல்லி மீனாவிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை தனது மருமகன் கூறுவதை கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நாகேஸ்வரியின் செல்போனை எடுத்து மீனாவின் செல்போன் என்னை பிளாக் செய்துள்ளார். அதன்பிறகு மீனா, நாகேஸ்வரியின் கணவர் மணிகண்டனின் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மனைவியிடம் பேச வேண்டும் எனக்கூறி கடைசியாக வெள்ளிக்கிழமை செல்போனில் பேசியுள்ளார்.

இதில் மீனா என்னால் தான் உனக்கு பிரச்சனை எனவும் நான் உயிர் இழந்து விடுவேன் என கூறியதை கேட்ட நாகேஸ்வரி நீ ஏன் உயிர் இழக்க வேண்டும் நானே உயிரிழந்து விடுகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்த நாகேஸ்வரி வீட்டினுள்ளே இருந்த மின்விசிறியில் புடவையால் தனக்குத் தானே தற்கொலை செய்து கொண்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி நாகேஸ்வரி யின் தாயார் செண்பகவல்லி கூறுகையில், நாகேஸ்வரியின் மரணத்திற்கு மீனா தான் காரணம் என காவல் நிலையத்தில் புகாரளிக்க முயன்றதாகவும் புகாரை எடுக்க ஆவடி காவல்துறையினர் மறுத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தன் மகளுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது மீனாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கூறினார். சம்பவம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.