இன்றைய ராசிபலன் (29-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

205

இன்றைய ராசிபலன்…..

மேஷம்

மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மன சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள் , நண்பர்களின் அன்பு தொல்லை உண்டு. முன்கோபத்தால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனையை தீர்க்க உதவிகள் கிடக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கும்பம்

கும்பம்: கனவன்- மனைவிக்குள் அன்னியோயம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நிம்மதியான நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லை என்று ஆதங்கபடுவீர்கள். உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.