வெளிநாட்டில் இருந்து வந்த காதலன் செய்த மோசமான செயல்!!

231

சென்னையை சேர்ந்த முகமது என்பவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.முகம்மது மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இதையடுத்து, முகமது வேலைக்காக மலேசியா சென்றுவிட்டார். இருவரும் தினமும் போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆயிஷா குறித்த தவறான தகவலை முகமதுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட முகமது, தனது காதலியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய முகமது, நேராக தனது காதலி வீட்டுக்கு சென்று, நான் உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் எனக்கூறி சண்டையிட்டுள்ளார்.

பின்னர், இரண்டாவது முறை தனது காதலி வீட்டுக்கு செல்கையில் மயக்கமருந்து கலந்துகொடுத்து, அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து முகமதை கைது செய்தனர்.