ராஜா ராணி ஷப்னமின் திருமணம் தள்ளிப்போவது ஏன்?- ஒருவேளை நின்றுவிட்டதா?

208

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியலில் காமெடி கலந்த வில்லியாக நடிப்பவர் ஷப்னம். இவருக்கு ஆர்யன் என்பவருடன் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்பிறகு பிப்ரவரி 14ம் தேதி 2018ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது, பின் ஜுன், ஜுலையில் நடக்கும் என்றனர். இப்படி அவருடைய திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சீரியல் நடிக்கிறவங்க லைவ் எப்படி என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே. தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வரும் இல்லையெனில் வராது.

சீரியல்கள் ஒருபக்கம், என்னுடைய பியூட்டி பார்லர் பிசினஸ் என பிஸியாக இருக்கிறேன், இதுதான் திருமணம் தள்ளிப்போவதற்கு காரணம். இந்த வருஷத்துக்குள் திருமணம் முடிந்துவிடும் என நம்புவதாக பேசியுள்ளார்.