என்னை பார்த்தாலே என் மகள் பயந்து பின்வாங்குவாள்: வேதனையாக இருக்கும் என கூறிய டோனி!!

168

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி தனது மகள் தன்னை மனிதராக மாற்றினாள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி கிண்ணத்தைக் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரின் போது டோனியை விட, அவரின் மகளான ஜீவாவே அதிகமாக பேசப்பட்டார். ஜிவாவின் ஒவ்வொரு அசைவுகளும், டோனி அவருடன் மைதானத்தில் விளையாடுவதும், கிண்ணத்தை வென்ற பின்பும் கிண்ணத்தை வீரர்களிடம் கொடுத்துவிட்டு, தனது மகளுடன் விளையாடினார்.

இப்படி மகள் மீது அதிக பாசம் கொண்ட டோனி, அது குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.அவர் கூறுகையில், ஜிவா பிறந்தபோது, நான் அவளுடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதிலே கவனமாக இருந்தேன்.

இதனால் தந்தையாக பல விடயங்களை இழந்துவிட்டேன். நான் ஜிவாவுடன் நெருக்கமாக இல்லாத காரணத்தினால், அவள் என்னை பார்த்து பயந்தாள், அதன் பின் அவள் சாப்பிட அடம்பிடித்தால்கூட அப்பாவைக் கூப்பிடவா என் பெயரைக் கூறினால் பயந்துவிடுவாள்.

அதுமட்டுமா ஏதாவது குறும்பு செய்தால் கூட, என் பெயரை கூறினால் பயந்துவிடுவாள், இதைக் கண்டு வேதனையாக இருந்தது. ஒரு தந்தையாக என்னால் அவளுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை என வருத்தமடைந்தேன்.

ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஜிவா என்னுடன் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகத்திடம் முன்பே நான் என் மகள் ஜிவாவை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன், அதற்கு அவர்களும் அனுமதி கொடுத்தனர்.

ஜிவா ஒவ்வொரு வீரர்களின் குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது.

அவளுக்கு கிரிக்கெட்டைப் பற்றி தெரியுமா என்பது தெரியவில்லை, ஆனால் கிரிக்கெட் பற்றிய கேள்விகளுக்கு அவள் சரியாக சொல்லும் பதில் வியப்பாக இருக்கிறது என்று டோனி கூறியுள்ளார்.