என் அடுத்த படம் இந்த நடிகருடன் தான், ஆனால்? ஷங்கர் வெளியிட்ட ஷாக் செய்தி!!

136

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க, பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இவர் நேற்று தன் குருநாதர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘என் அடுத்தப்படம் ட்ராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாக கொண்டதாக தான் இருந்தது.

இந்த படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன், ஆனால், அதற்குள் என் குருநாதர் முந்திக்கொண்டார்’ என அவர் சொல்ல, அட இப்படி ஒரு படம் ரஜினிக்கு மிஸ் ஆகிவிட்டதே என பலரும் ஷாக் ஆனார்கள்.