தன்னை விட வயதில் குறைந்த பேஸ்புக் காதலனை தேடி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வெளிவரும் பின்னணி!!

863

கிருஷ்ணகிரி…

தன்னை விட வயது குறைவான பேஸ்புக் காதலனை தேடி தமிழகம் வந்த கேரள பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் பகுதியில் நேற்று மாலை முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் படி பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், சடலமாக மீட்கப்பட்ட பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (25) என்பது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்ற வாலிபர், ஐந்து வருடங்களாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் பழகிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

கார் டிரைவரான சூர்யா கேரளாவிற்கு சென்று நகை, பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

சூர்யாவை தேடி ரஞ்சனி அவரது ஊருக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கேரளாவுக்கு திரும்பாமல் காவேரிப்பட்டிணம் சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்த நிலையில் தான் முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து த.ற்.கொ.லையா அல்லது கொ.லை.யா என வி.சா.ரித்து வருகின்றனர்.