நல்லவேளையாக இது மனித காதல் அல்ல : புனித காதல் !

950

தோகை மலை எனும் ஊரில் மயில் ஒன்று தனது துணையை இழந்த சோகம் தாளாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருக்கிறது இந்த அழகிய ஊர். பெயருக்கேற்றாற்போல இந்த ஊரில் மயில்களின் இனத்தொகை அதிகம்.

விவசாய நிலங்களில் இரை தேடி செல்லும் இப்பறவைகள் உணவருந்தியபின் தன் இருப்பிடத்திற்கு திரும்பி விடும்.கடந்த 9 ஆம் தேதி ஒரு பெண் மயிலும் ஒரு ஆண் மயிலும் நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தெரியாமல் பெண் மயில் மீது மோதிவிட பெண் மயில் அங்கேயே இறந்துவிட்டது.

இது தெரியாத ஆண் மயில் பெண் மயிலை தேடி சாலையை கடந்து சென்று அங்குமிங்கும் அலைந்தது. மயிலின் இந்த பரிதவிப்பு அங்குள்ளோரை கண்கலங்க வைத்தது.

ஆனால் ஆண் மயில் தனது தேடுதலை நிறுத்தவில்லை. ஒவ்வொரு மரத்தின் மீது ஏறியும் மின்கம்பத்தின் மீது நின்றும் தனது பெண் மயிலை துழாவியது.
இந்த மயிலின் மீது இரக்கப்பட்டு அங்குள்ளோர் உணவு கொடுத்ததும் அது உண்ணவே இல்லை.

நேற்று முன்தினம் அங்குள்ள கறுப்பர்கோயில் மின் கம்பத்தில் மேலே ஏறிய மயில் தன் இணை மயிலை தேடிவிட்டு அங்கிருந்து அடுத்த இடத்திற்கு பறக்கையில் எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி அந்த ஆண் மயில் இறந்து போனது.

இதற்கு பிறகு வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து கடவூர் பகுதியில் மயிலை புதைத்தனர்.

பெண் மயிலின் பிரிவுக்கு பிறகு உயிர் வாழ விரும்பாத ஆண் மயில் விரும்பியே இந்த மரணத்தை ஏற்று கொண்டிருக்கும் என்று தோன்றும்படிக்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

மனிதர்கள் மத்தியில் காதல் என்கிற வார்த்தையே வேறொரு அர்த்தத்திற்கு மாறிப்போன வேளையில்

காதல் எனும் அற்புதம் இன்னமும் உயிரோடு இருப்பது இந்த மயில்கள் போன்ற விலங்கினங்கள் மூலமாகத்தான் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.