பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்துள்ளீர்கள்? கமலிடம் நடிகர் பொன்னம்பலம் சொன்ன உருக்கமான தகவல்!!

604

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியை பிரபல திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரே தான் கடந்த ஆண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நுறு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இறுதியில் வெல்லப்போவது யார் என்பது தான் சஸ்பென்ஸ்.

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது போட்டியாளராக திரைப்பட நடிகரான பொன்னம்பலம் கலந்து கொண்டுள்ளார்.அப்போது அவரிடம் இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்று கமல்ஹாசன் கேட்ட போது, திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு எப்போது வேண்டும் என்றாலும் எதுவும் ஆகலாம், இதனால் என்னுடைய குடும்பத்தினர் தான் இல்லாமல் எப்படி இருக்கப் போகின்றனர் என்பதை அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.