பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்!!

586

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பேர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்று ஆரம்பமாகியுள்ளது . நிகழ்ச்சியை இரவு 7 மணிக்கு பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் ரசித்துக்கொண்டுள்ளனர் .

போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்கள்.பிக் பாஸ் வீட்டிற்குள் கமல் ஹாஸன் இருக்கும் ஒளிப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் யார், யார் என்று தெரிந்துவிட்டது. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்க கவர்ச்சிப் புயல் வீச வைக்க மும்தாஜ், இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை யாஷிகா ஆனந்த், ஹோம்லி பெண் ஜனனி ஐயர், பாயும் புலி படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ் படத்தில் நடித்த ரித்விகா, தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா, நடிகர் மகத் ராகவேந்திரா, டேனியல் போப், ஆனந்த் வைத்யநாதன், சென்ட்ராயன், நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, பொன்னம்பலம், மமதி சாரி, வைஷ்ணவி,சாரிக் ஹாசன்ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த முறை ஆரவ், ஓவியா என்று ஒரு காதல் ஜோடி உருவானது. இந்த முறை காதல் ஜோடி உருவாகவே மங்காத்தா பட புகழ் மகத்தை அழைத்து வந்துள்ளார்களாம்.