இன்றைய ராசிபலன் (19-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

368

இன்றைய ராசிபலன்…..

மேஷம்

மேஷம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பானநாள்.

ரிஷபம்

ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: இதுவரை இருந்த அலைச்சல் கோபம் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். குடும்பத்தில் உள்ளவர் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப் பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயநரதிகாரிகளின் உதவி கிடைக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: வழக்குகள் சாதகமாக மாறும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

துலாம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட கால திட்டத்தில் நின்று போன காரியம் ஒன்று நிறை வேறும்.வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவரின் சந்திப்பு நிகழும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.

மகரம்

மகரம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினால் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மீனம்

மீனம்: வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.