அச்சுறுத்திய நாகப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடிய பயணிகள் : விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

990

அச்சுறுத்திய நாகப்பாம்பை துடைப்பத்தாலேயே துடைத்து விரட்ட பெண் ஒருவர் முயன்ற சம்பவம் புதுச்சேரி விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும், முயற்சி தோல்வியில் முடிய அந்த நாகப்பாம்பை பொலிஸார் ஒருவர் பிடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். பாராட்டு பொலிஸாருக்கு மட்டும் இல்லை,பெண்ணுக்கும்தான்.

பெண்ணின் தைரியத்தை பாராட்டி நாளை விமான நிலைய உயரதிகாரிகள் கௌரவிக்கவுள்ளார்களாம்.புதுச்சேரி விமான நிலையத்தின் விஐபிகளின் வரவேற்பறையில் நேற்று 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்து விட்டது.

இதனை கண்டதும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பாம்பை கண்டதும் அனைவரிடம் பயமும் பீதியும் தொற்றிக் கொண்டது.

விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் தரைதுடைக்கும் துடைப்பத்தை எடுத்து, நாகப்பாம்பை தள்ளிக்கொண்டே வெளியில் விடலாம் என முயற்சித்தார். ஆனால் முடியவில்லை.

அந்த பாம்பு அங்கிருந்த புதர் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பிறகு பொலிஸார் ஒருவர் விரைந்து வந்து அந்த பாம்பை பயமின்றி துணிச்சலாக பிடித்தார்.

இதனை கண்டு அங்கிருந்தவர் உயரதிகாரிகள் அனைவருமே அதிர்ச்சியில் வாயை பிளந்தனர். பின்னர் அந்த பாம்பை பொலிஸார் வனத்துறையினடம் ஒப்படைத்தார்.

இதனால், பொலிஸாரையும், பாம்பை விரட்ட முயற்சி செய்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.இதேவேளை, பாம்பை பிடித்த பொலிஸாரை விட நாகப்பாம்பை துடைப்பத்தாலேயே துடைத்து விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு அதிகமாக பாராட்டுக்கள் குவிந்துள்ளது.