இந்த நடிகை தான் அதற்கு செட்டாகும் : ரூட்டை மாற்றி பிரபல நடிகர் போட்ட திட்டம்!!

616

விஜய் சேதுபதி..

தமிழ் சினிமாவில் உழைத்து முன்னேறி முன்னணி இடத்தினை பிடித்தவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது கையில் பல படங்களை வைத்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற மூன்று படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் விஜய் சேதுபதியின் மெத்தன தனத்தை பலரும் பல விதமான கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தோல்வி அடைந்தால் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து ஒரு வெப்சீரிஸ்சை இயக்கி வருகின்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ்ல் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே முகில் எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் விஜய் சேதுபதிதான் ரெஜினா கசாண்ட்ராவை சிபாரிசு செய்து இருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.