கேப்டனான ஜனனி – முறைத்து பார்த்த மும்தாஜ்!!

810

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இதன் முதல் வார தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. பிக் பாஸ் வீட்டில் மூன்று கடித உறை இருக்கும். அதை யார் முதலில் கண்டு பிடிக்கின்றார்களோ அவர்கள் தலைவர் வேட்பாளராகாலாம். அவர்களில் ஒருவர் தலைவராகலாம் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மகத், ஜனனி ஐயர், மும்தாஜ் ஆகியோர் கடித உறையை கண்டுபிடித்து தலைவர் வேட்பாளராகினர். அதில் 8 பேர் வாக்குகள் பெற்று ஜனனி தலைவரானார்.

நிகழ்ச்சியில் வந்ததிலிருந்து யாருடனும் கலக்காமல் இருந்த மும்தாஜ், கடித உறையை தேடும் போது செண்ராயனை பெண்களில் உடைகளை கலைத்து தேடக்கூடாது என கூறினார். இதனால் சில ஆண் போட்டியாளர்கள் கடுப்பாகினர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரையும் வெளியேற்றப்படப்போவதில்லை என்பது போட்டியாளர்களுக்கு தெரியாது. இருப்பினும் யார் வெளியேற்ற விரும்புகிறீர்கள் என மற்ற போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. இதில் அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், நித்யா, வைஷ்ணவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் குழப்பங்களும், சிறிய மனக்கசப்பு உருவாக தொடங்கிவிட்டது.