10 நிமிஷத்தில் ஒன்றரை லிட்டர் கோலா குடித்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் : மருத்துவரின் ரிப்போர்டால் அதிர்ச்சி!!

437

சீனா..

பத்து நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோலாவை குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த பெய்ஜிங் என்ற நகரத்தில் உள்ள இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர் நண்பர்களிடம் தான் பத்தே நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை குடித்து விடுவதாக சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அவர் அந்த கோக்கை குடித்த ஒரு சில நிமிடங்களில் வயிற்று வலியால் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த தெரிவித்துள்ளனர்.

மேலும், மிக வேகமாகச் சோடாவை குடித்ததால் அவரது குடலில் வாயு உருவாகியுள்ளது.

அது அவரது ரத்தத்தில் கலந்து கல்லீரலையும் பாதித்துள்ளது. இதனால் அவரது கல்லீரலைப் பாதுகாக்கவும் உடலின் மற்ற பாகங்கள் மோசமாவதைத் தடுக்கவும் மருந்துகள் கொடுக்கப்பட்டது,

ஆனால் 12 மணி நேரத் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அந்த இளைஞரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.

கோகோ கோலாவை குடித்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோகோ கோலா நிறுவனம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.