சம்மதம் சொன்ன சமந்தா… விவாகரத்துக்கு பின் நடைபெற போகும் முக்கிய சம்பவம் !!

265

நடிகை சமந்தா..

சாந்தரூபன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார் .

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.

இதனிடையே நாக சைதன்யாவுடன் வி.வா.க.ர.த்து வி.ஷயம் தகவல் வெளியாக தொடங்கியத்தில் இருந்தே சில மாதங்களாகவே சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இந்நிலையில் வி.வா.க.ர.த்.துக்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கவுள்ளார். சமந்தாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடனும், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படத்திலும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.