என்னிடம் ரூ.100 கோடி பேரம் பேசினார்கள்: ரகசியத்தை அம்பலப்படுத்திய கமல்ஹாசன்!!

1414

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நாங்கள் உண்மையான சாதனைகளை, இலக்குகளை நிகழ்த்தவே விரும்புகிறோம். கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம்.

டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூடி விடுவதால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் நாம் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு பேச விரும்பவில்லை. நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ரஜினியுடன் நான் கூட்டணி சேர்வேனா என்று அடிக்கடி கேட்கிறார்கள். அதுபற்றி இப்போதே சொல்ல முடியாது.எல்லா கட்சிகளுடனும் எனக்கு கொள்கை ரீதியாக மாறுபடுவது உண்டு. ஆனால் தமிழக அரசியலில் நான் முக்கியமாக நினைப்பது ஊழலைத்தான். இந்த ஊழலை முழுமையாக வேரறுக்க வேண்டும்.

எனக்கு கூட ஒரு கட்சி லஞ்சம் தர பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அந்த கட்சியில் சேர மறுத்து விட்டேன்.