மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழச்சி!!

449

ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியானது நேற்று இரவு மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக பல்வேறு கலை, நிகழ்ச்சிகள் அரங்கேறின.

அதில் பாலிவுட் நட்சத்திரங்களான மாதுரி தீட்சித், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதற்கு நடுவர்களாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட் நட்சத்திரங்கள் மலைகா அரோரா, பாபி தியோல், குனால் கபூர் ஆகியோர் செயல்பட்டனர்.அதில் 2018 ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை 19 வயதான தமிழ்நாட்டுப் பெண் அனுகிரீத்தி வாஸ் பெற்றுள்ளார்.

அம்மாவுடன் தனியே வளர்ந்த அனு, சென்னை லயோலா கல்லூரியில், தற்போது பிரெஞ்சு மொழியில் பி.ஏ. படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நடனம், டிரைவிங் உள்ளிட்டவற்றிலும் சிறந்து விளங்கிவருபவராம் அனு.

மிஸ் இந்தியா பட்டம் வென்றதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேல்டு பட்டத்திற்கான போட்டியிலும் அனு இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார் என்பதுவும் கூடுதல் தகவல்.

வெறுமென அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திடாமல் போட்டியாளர்களின் சமூக பார்வை, சிந்தனை திறன் உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொண்டு நடத்தப்படக்கூடிய மிஸ் இந்தியா அழகி போட்டியில் வென்ற சென்னை தமிழச்சி அனுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.