களிமண்ணை உணவாக சாப்பிடும் மக்கள்! வீரேந்திர சேவாக் உருக்கம்!!

567

ஹெய்தி நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், அதை வாங்கு அளவுக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் இல்லை.இதனால், களிமண்ணால் அப்பளம் போல் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த ரொட்டியைச் சாப்பிட்டால், பலமணிநேரம் பசியைத் தாங்கும் என்பதால், அங்கு இதை உணவாகக் கொள்கின்றனர்.

இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஹெய்தி மக்கள் களிமண் ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடியோ இணைத்து கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.அந்த ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

வறுமை, பசி, தென் அமெரிக்க நாடான ஹெய்தியில் மக்கள் களிமண்ணில் உப்பு கலந்து ரொட்டியாகச் செய்து பசிக்காகச் சாப்பிட்டு வருகிறார்கள். மக்களே நான் உங்களிடம் கேட்பது, தயவு செய்து நீங்கள் உண்ணும் உணவை வீணாக்காதீர்கள்.

உங்களால் அந்த உணவின் மதிப்பை அளவிடமுடியாது. ஆனால், ஹெய்தி நாட்டு மக்களுக்கு நாம் வீணாக்கும் உணவு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

ஆதலால், உங்களிடம் தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால், தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள். அல்லது ரொட்டி வங்கி ஏதேனும் இருந்தால், அல்லது ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் அமைப்புகள் இருந்தால், அவர்களிடம் கொடுத்து உதவுங்கள் என உருக்கமா கூறியுள்ளார்.