இந்த வார ராசிப்பலன்! கண்டிப்பாக இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்!

616

மேஷம்:சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவிடம் அனுசரித்து போவது நல்லது. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை சரிபார்த்து ரிப்பேர் செய்து கொள்ளவும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.

24-06-2018 அன்று இரவு 10-33 மணி முதல் 27-06 -2018 அன்று காலை 09-35 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

ரிஷபம்:சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் மூலம் பண வரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதாரத்தில் சிக்கல் உண்டாகும். உங்கள் ராசிநாதன்

சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

27-06 -2018 அன்று காலை 09-35 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

மிதுனம்:சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமய சந்தர்ப்பத்திற்க்கு தகுந்தார்போல் செயல்படுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு கிடைக்கும்.

கடகம்:சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புதிதாக நகைகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவு உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.

சிம்மம்:உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்றவற்றில் பிரச்சினை உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி:சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தன சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை. ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தந்தை வழி முன்னோர்களினால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

துலாம்:சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை வீட்டாருடன் சச்சரவைத் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்.

விருச்சிகம்:சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் செயல்கள் மன சங்கடத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு விற்கும் சூழ்நிலை உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பு செலவு அதிகரிக்கும்.

சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் விஷயங்களில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும்.

தனுசு:சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் சிறப்படையும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்:சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடன் பிறப்புகளுக்கு உடல் ஆரோக்கியம் குறையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும்.

சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

கும்பம்:சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு போன்ற வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுளின் அருள் அதிகரிக்கும்.

சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியின் உடல் நலனில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மன தைரியம் உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையில்லாமல் வீண் செலவுகளை தவிர்க்கவும்.

மீனம்:சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் பண வரவில் தடை உண்டாகும்.

சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

22-06 -2018 அன்று பகல் 01-43 மணி முதல் 24-06-2018 அன்று இரவு 10-33 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.