‘ஏழுமலை’ படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி உள்ளார் தெரியுமா?

275

கஜாலா…

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் “ஏழுமலை”. இந்த படத்தில் அர்ஜுன், சிம்ரன், மும்தாஜ், விஜயகுமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த மற்றொரு நடிகையை நியாபகம் இருக்கிறதா அவர் என்ன ஆனார் என்ன செய்து வருகிறார் தெரியுமா. அந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் பெயர் கஜாலா.

இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்த கஜாலா, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சினிமாவை தவிர்த்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஆவார் என்ன ஆனார் தெரியாமல் இருந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி சமீபத்தில் தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எழுமலை படத்தில் நடித்த நடிகையா இது என வாயடைத்து போயுள்ளனர்.

காரணம் படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் இன்னமும் சற்றும் இளமை குறையாமல் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இவர் மாடர்ன் உடையில் கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.