மனதிலிருக்கும் விஜே சித்ராவின் உருவத்தை நெஞ்சில் குத்திய ரசிகர் : மிரண்டு போன ரசிகர்கள்!!

143

சித்ரா…

சென்னை: மனசுக்குப் பிடித்தவர்கள் மறைந்தாலும் தன்னுடைய அன்பு மறையாது என்பதை விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் நிரூபித்துள்ளார். பலரும் வியந்து போகும் அளவில் அவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மறைத்தாலும் மறையாத பாசம் வாழ்ந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடலுக்கு தகுதியானவர்களின் விஜே சித்ராவும் ஒருவர்.

அவர் இந்த மண்ணுலகை விட்டு சென்று விட்டாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார் என்பதை பல நேரங்களில் அவருடைய ரசிகர்கள் நிரூபித்து வருகின்றனர். அவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு விஜேவாகவும் பலருக்கும் பரிச்சயமானவர். தன்னுடைய பேச்சால் எப்போதும அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் குணத்துக்கு சொந்தக்காரர் தான் விஜே சித்ரா.

முல்லையாக வாசனை தான் ஒரு மனநல மருத்துவராக இருப்பதால் அடுத்தவர்களின் முகத்தை பார்த்து அவர்களுக்கு தேவையான ஆறுதல் கூறி விடும் ஒரு கேரக்டராக இருந்ததால் தான் இவருக்கு நடிப்பை தாண்டி ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்துள்ளனர்.

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கேரக்டரில் பல ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தை பிடித்துவிட்டார். முல்லை என்று சொன்னால் இப்ப வரைக்கும் பலருடைய மனதில் நினைவுக்கு வருவது வீட்டில் சித்ராவின் முகம் தானாம்.

ரசிகர்களை கவர்ந்த அந்த கேரக்டர் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி ஒரு சில வாரங்களுக்குள் அவருடைய திடீர் மரணம் ரசிகர்களை வெகுவாக பாதித்து விட்டது.

அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று இப்ப வரைக்கும் சரியாக வெளியே தெரியவில்லை என்றாலும் அவருடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் உறவினர்களை போல துடித்து வருகின்றார்கள்.

தற்போது விஜே சித்ராவின் ரசிகர் ஒருவர் செய்த செயல் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெஞ்சில் பூத்த பூ முகம் விஜே சித்ரா தான் ஒரு பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களிடம் அவர் எப்போதும் பாசமாகவும் ஜாலியாகவும் தான் பழகி வந்துள்ளார்.

ரசிகர்களுடன் நேரடியாக இவர் பழகி வந்ததால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்ததால் ரசிகர்களிடம் இவர் அதிகமாக நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இதனால் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத இவருடைய தீவிரமான ரசிகர் ஒருவர் அவருடைய உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.

அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் பல ரசிகர்கள் விஜே சித்ராவை நினைத்து ஃபீல் பண்ணி வருகிறார்கள்.