குடிகார கள்ளக் காதல் ஜோடி செய்துவந்த மோசமான வேலை!!

239

வேடச்சந்தூர்..

வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது.

வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து இருவர் நகை, பணத்தை திருடிச் செல்வதாக காவல்துறையினருக்கு,

தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். வேடச்சந்தூர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் இருவரும் நிற்கக் கூட முடியாத முழு போதையில் காவலர்களின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பதிலளித்து காவலர்களிடம் லந்துக் கொடுத்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டனர். அப்பொது தன்னுடன் வந்த பெண்ணை விட்டு விட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கணேசன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவருடன் வந்த சுமதி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கரூர் மாவட்டம் தோகமலை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர். அதே பகுதியைச் சேர்ந்த சுமதியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் தனியாக வசித்து வரும் மூதாட்டிகளை குறிவைத்து நகை பணத்தை திருடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

அந்த நகைகளை விற்று கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வந்ததாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து கரூரில் தலைமறைவாக இருந்து வந்த கணேசனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியாக இருக்கும் மூதாட்டிகளிடம் லாவகமாகப் பேசி மயக்க மருந்து கொடுத்து நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய குடிகார கள்ளக்காதல் ஜோடியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.