இன்றைய ராசிபலன் (25-01-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

754

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: அனுபவபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விஐபிகள்அறிமுகமாவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கணவன் மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பலம்,பலவினத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.