படுக்கை அறையில் கருகிய மனைவி, மகள் : சிலிண்டரை வெடிக்க செய்து கணவரே கொன்றாரா?

137

தமிழ்நாட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. பிஸ்கட் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்த இவருக்கு சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிப்பழக்கமும் இருந்துள்ளதால், குடும்பத்தில் தகராறும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது

எல்லா வகையிலும் பிரச்சனைகள் சேர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராமமூர்த்தி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

நேற்றிரவு 2 மணியளவில், தனது மனைவி காஞ்சனா, 6 வயது மகள் அக்‌ஷயா தூங்கி கொண்டிருந்த அறையில் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து, அதனை திறந்துவிட்டதுடன் தீயையும் பற்றவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்திலிருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில், தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனைவி, காஞ்சாவும் அவர்களது 6 வயது பெண் அட்ஷயாவும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.