காலாவில் ரஜினியின் மருமகள்: நிஜத்தில் இனி தமிழ்நாட்டு மருமகள்

285

காலாவில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்த சிங்கப்பூரை சேர்ந்த சுகன்யா தமிழ்நாட்டு மருமகளாகிவிட்டார்.சென்னையைச் சேர்ந்த கல்லூரி நண்பர் விக்ரமை வருகிற 14-ம் தேதி சிங்கப்பூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

கல்லூரியில் படித்தபோது சுகன்யாவின் சீனியர் மாணவர் விக்ரம். படிப்பு முடிந்தவுடன் அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

காலா படம் முடிந்தவுடன், சுகன்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால், காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்கள்.