விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகை அதிரடியாக மீட்பு!!

198

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம் நடிகையை பொலிசார் அதிராடியாக மீட்டுள்ளனர்.

மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகே அமைந்துள்ள பஞ்சரா ஹில் பகுதில் செயல்பட்டுவரும் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அந்த ஹொட்டலில் இருந்து 24 வயது மதிக்கத்தக்க இளம் நடிகை உள்ளிட்ட பெண்களை மீட்டுள்ளனர். பொலிஸ் நடவடிக்கையின்போது தப்பியோட முயன்ற இரு நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜனார்தனன் ராவு, இளம் நடிகைகள் மற்றும் துணை நடிகைகளை மட்டுமே கொண்டு இந்த தொழிலை செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள பல துணை நடிகைகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடும் துணை நடிகைகளுக்கு வாரம் ஒரு லட்சம் ஊதியமாக வழங்கி வருவதாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா 20,000 ரூபாய் கட்டணமாக ராவு பெற்றுவருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.