வட்ஸ் அப்பில் வெளியான புகைப்படத்தால் தற்கொலை : பாடசாலை மாணவியின் உருக்கமான கடிதம்!!

129

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இண்டோரை சேர்ந்தவர் காயத்ரி (16). பள்ளிக்கூட மாணவியான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் காயத்ரியின் சடலத்தை கைப்பற்றியதோடு அங்கிருந்த கடிதத்தையும் கண்டெடுத்தார்கள்.

அதில், மிலன் என்ற மாணவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அந்த புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே காயத்ரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையில் இந்த வழக்கை சரியாக விசாரிக்காத துணை ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, வழக்கானது வேறு அதிகாரிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.