அப்பளம் போல் நொறுங்கிய கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

67

கேரளாவின் காசர்கோடில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.கர்நாடகாவின் மங்களாபுரத்தை சேர்ந்த 18 பேர் கேரளாவில் உறவினரின் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று காலை காசர்கோடு அருகே உப்பளா என்ற இடத்தில் வந்த போது, எதிரே வந்த சரக்கு லொறியில் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், மற்றவர்கள் அலறி சத்தம் போட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

ஜீப் அப்பளம் போன்று நொறுங்கியதால், மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.விரைந்து வந்த காசர்கோடு பொலிஸ் அதிகாரிகள், காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.