செல்பி மோகம்… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவர்கள் முன் இளைஞர்கள் செய்த கேவலமான செயல்!!

864

ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம் அருகே ஜெய்சால்மர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 பேரின் மீது, பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்ற இவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளனர்.

அப்பொழுது அங்கு ஓடிவந்த பொதுமக்களில் சிலர் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், செல்பி வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, விபத்தில் சிக்கியவர்கள், Parmanand (27), Gemaram (30) மற்றும் Chandaram (30) என்பது தெரிய வந்தது. குஜராத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் மூன்று பேரும், ராஜஸ்தானில் வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்பும்பொழுதே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில், Gemraram தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடனும், Chandaram தனது பெற்றோரிடம் இருந்து பிரிந்து மனைவி மற்றும் 5 மாத மகளுடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. அதேசமயம் Parmanand திருமணமாகாதவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.