அண்ணனின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தங்கை!!

105

அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த திருப்பதி என்பவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் சரியாக பணிக்கு செல்லாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த திருப்பதி, அளவுக்கதிகமாக மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொள்ளாத இவர் தனது இரண்டு தங்ககைள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரது இறப்பு செய்தி தொலைபேசி வாயிலாக இவரது தங்கை கற்பகவல்லிக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருந்தபோது தங்கை அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, இருவரது உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.