பல வீடுகளில் பாத்திரம் கழுவி மகனின் கனவை நனவாக்கிய தாய்!!

85

திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகளில் பாத்திரம் கழுவி தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார் தாய் சிவசக்தி.

பாஸ்கர் – சிவசக்தி தம்பதியினரின் இளைய மகன் சுதாகர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். தாய் சிவசக்தி அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் பாத்திரம் கழுவி வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

நீட் தேர்வு பயிற்சிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், சிவசக்தி தனது நகைகளை விற்றதோடு மட்டுமல்லாமல் தான் வேலை பார்த்த பணத்தினை சேர்த்து வைத்து உதவி செய்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவரால் நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இருப்பினும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இரண்டாம் முறை நீட் தேர்வுக்கு எழுதி 303 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு, நெல்லை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டதால், இதய சிறப்பு மருத்துவராக வேண்டும் என சுதாகர் தெரிவித்துள்ளார்.