கல்யாணம் ஆகி 7 நாள் ஆகியும்.. நெருங்க விடாத புதுப்பெண் : அதிர்ந்துபோன கனவன்!!

436

இந்தூர்…

சமீப காலமாகவே, திருமணத்தை சுற்றி அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அதிகம் கடந்து சென்றிருப்போம்.

அதிலும் குறிப்பாக, கல்யாண மேடையில் வைத்து, கடைசி நிமிடத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உல்டாவாக ஏதேனும் நிகழ்ந்து, நிகழ்ச்சியில் இருக்கும் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கும்.

கடந்த ஒன்றிரண்டு வாரங்களிலேயே கரண்ட் கட் காரணமாக தாலியை மாற்றி கட்டிய சம்பவம், குடித்து விட்டு மாப்பிள்ளை மேடை ஏறியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பற்றிய செய்தி என நிறைய நிகழ்ந்து விட்டது.

இந்நிலையில், திருமணம் முடிந்து சுமார் 7 நாட்களுக்கு பிறகு நடந்துள்ள சம்பவம் ஒன்று, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரின் பெற்றோர் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், திருமண புரோக்கர் ஒருவரின் அறிமுகம் கிடைத்து, லலிதா என்ற பெண்ணையும் ராகுலுக்காக அவரின் குடும்பத்தினர் பார்த்து பேசி முடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ராகுல் மற்றும் லலிதா ஆகியோரின் திருமணம், கோலாகலமாக உறவினர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கணவரின் வீட்டில் லலிதாவும் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்படி இருக்கையில், கணவர் ராகுலை அருகே கூட வர விடாமல் தவிர்த்து வந்துள்ளார் லலிதா. ஏதேதோ காரணங்கள் சொல்லி, லலிதாவும் கணவரை தவிர்த்த படி இருக்க, ராகுலுகம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், திருமணம் முடிந்து 7 நாட்கள் கழிந்த வேளையில், திடீரென லலிதா வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இதனால், ராகுல் மற்றும் குடும்பத்தினர் பதறி போன நிலையில், மற்றொரு அதிர்ச்சியும் அவர்களை வந்து சேர்ந்துள்ளது. வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் சுமார் 3 லட்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு லலிதா தப்பிச் சென்றுள்ளார். இதன் பின்னர், ராகுலின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதனிடையே, போலீசார் விசாரணையின் போது, லலிதாவின் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை ஆய்வு செய்ததில் அவை போலி என்பது தெரிய வந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ராகுலுக்கு பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கரையும், பணம், நகைகளுடன் தப்பி ஓடிய பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.