3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

1234

பிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதன் பின் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கவியரசு மற்றும் முருகப்பெருமாள் என்ற இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பிடிபட்ட கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் முதலில் வெளிமாநில அழகிகளை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் இளம் நடிகைகள் இருந்தால் கூறுங்கள், நாங்கள் நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பணத்தின் மீது ஆசை கொண்ட அவர்கள், பிரபல திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளில் தற்போது வாய்ப்பு குறைந்துள்ளவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து செல்போன் எண்களை எடுத்துள்ளனர்.

அதன் பின் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நள்ளிரவு நேரத்தில் அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, நடிகைகளின் மன நிலையை அறிந்து கொண்டு, குறுஞ்செய்திக்கு மறுப்பு தெரிவிக்காத நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் டேட்டிங் மூலம் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் யாருக்கும் தெரியாது, ரகசியமாக காக்கப்படும் என்று உத்திரவாதமும் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் வலையில் சிக்கிய நடிகைகள் மூலம் பிற நடிகைகளின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இவை அனைத்தும் நட்சத்திர ஹோட்டலிலே நடந்துள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையார்களுக்கு நடிகைகளின் விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பணம் போன்றவைகள் எல்லாம் அனுப்பியுள்ளனர்.

அப்படி தான் நடிகை ஜெயலட்சுமிக்கும் வலை வீசியுள்ளனர். ஆனால் அவர் பொலிசாரிடம் புகார் கொடுத்துவிட்டதால் இவர்கள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் பின்னணியில் நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதால், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால் அவர்களையும் கைது செய்ய நேரிடும் என்பதால் இந்த இரண்டு புரோக்கர்களை வைத்தே பொலிசார் வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.