மணக்கோலத்திலேயே தேர்வெழுதிய புதுப்பெண் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

130

கர்நாடக….

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்தது.

அவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடந்த நாள் அன்றே அவருக்கு செமெஸ்டர் தேர்வும் இருந்துள்ளது.

படிப்பை தொடர வேண்டும் ஆவலில், தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும் என்று ஐஸ்வர்யா கேட்டிருக்கிறார். அவர்களும் திருமணம் படிப்புக்கு தடையாக இருக்க கூடாது என கருதி அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, புதுமணப்பெண் ஐஸ்வர்யா மணக்கோலத்திலேயே கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். அவரின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.