பழிக்குப்பழி 300 உயிர்களை வெட்டிச்சாய்த்த கும்பல்!

1502

இந்தோனேஷியாவில் உறவினரை கடித்துக் குதறிய முதலையைப் பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டுச் சென்றுள்ளது.

இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலத்தில் சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதிக்குள் வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது.

இதில் இருந்து தப்பிக்க நினைத்த சுகிட்டோ முதலைப் பண்ணைக்குள் ஓடியபோது, மற்ற முதலைகளால் தாக்கப்பட்டு, கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சுகிட்டோவின் உறவினர்கள், அப்பகுதி மக்களுக்குத் தெரிவித்தனர். அவர்கள் பொலீஸில் புகார் செய்து, பண்ணை நிர்வாகத்திடம் பேசினார்கள்.

இதில் பண்ணை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொலீஸிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும், முதலையின் தாக்குதலால் பலியான சுகிட்டோவுக்கு இழப்பீடு தருவதாக பண்ணை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.