கல்யாணம் நடக்க இருந்த நேரத்துல.. மணப்பெண் செஞ்ச காரியம் : மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

284

ஒடிஷா…

எப்போதுமே இணையம் மூலம் நம்மை சுற்றி நடக்கும் பல வினோதமான அல்லது பரபரப்பான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள், அதிக அளவில் வைரலாகும். அதிலும் குறிப்பாக, சமீப காலமாகவே திருமண நிகழ்வினை சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் யாரும் எதிர்பாராத வகையில் அரங்கேறி வருகிறது.

குடித்து விட்டு மேடையில், மாப்பிள்ளை மேடைக்கு வந்ததால், தன்னுடைய திருமணத்தை நிறுத்தி இருந்தார் ஒரு மணப்பெண். அதே போல, மணமகன் வர தாமதம் ஆனதால், வேறு ஒருவருடன் மணப்பெண்ணுக்கு திருமணம் நடந்த நிகழ்வும் பலர் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இது போன்ற ஏராளாமான நிகழ்வுகள், கடந்த சில மாதங்களில் நிறைய நிகழ்ந்து விட்டது. இந்நிலையில், அந்த வகையில் ஒரு சம்பவம், திருமண சடங்குகள் நடைபெற்று வந்த நேரத்தில் நடந்துள்ளது, பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஷா மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ரெமு என்னும் கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமக்கள் திருமணத்திற்கு தயாராக இருக்க, சுற்றி எங்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருந்தனர். அப்படி ஒரு சூழ்நிலையில், திடீரென மணப்பெண் அங்கிருந்து எழுந்து, கையில் இருந்த வளையலை கழற்ற ஆரம்பித்து விட்டார். இதனைக் கண்ட அனைவரும், என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் ஒரு நிமிடம் பதற்றம் அடைய, பெண்ணின் குடும்பத்தினர் அவரின் செயலுக்கு எதிர்ப்பு காட்டினர்.

தனது எதிர்ப்பை மீறி, இந்த திருமணம் நிகழ இருந்ததாகவும், தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்ததாகவும் கூறி, அந்த மணப்பெண் திருமணத்திற்கு மறுத்து தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

பெண்ணின் செயலைக் கண்டதும், கீழே இருந்த மாப்பிள்ளை திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட அவரின் உறவினர்கள் அனைவரும், பதறிப் போய் அவரை சூழ்ந்து கொண்டனர்.

தண்ணீர் எடுத்து மாப்பிள்ளையின் முகத்தில் தெளித்து, அவரின் நிலையை சரி செய்ய பார்த்தனர். தொடர்ந்து, சில நிமிடங்களில் மாப்பிள்ளை நிலை சீரான பிறகு தான், பலரும் நிம்மதி அடைந்தனர்.

திருமண மேடையில், மணப்பெண் எடுத்த முடிவும், அதன் பின்னர் மாப்பிள்ளை மயக்கம் அடைந்த நிகழ்வும், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது