படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை முயற்சி செய்யுங்க

901

இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப சுமை, வேலைப்பளு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் தவிப்போம்.இதற்காக மருத்துவரை நாடுவோர் ஏராளம். ஆனால் நம் பாரம்பரிய பாட்டி வைத்தியத்தின் மூலம் படுத்தவுடன் தூக்கம் வரவைக்க முடியும்.

மாட்டுப் பால்:ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். ஏனெனில் அதில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன.

வாழைப்பழம்:வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தரக் கூடியது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.

சீரகத்தண்ணீர்:தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

தயிர்:தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் உறக்கம் நன்றாக வரும்.

வெங்காயம்:வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

வேப்பிலை:வேப்பிலை இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்