முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்ததால் இப்படி செய்கிறார்கள்: புதுமாப்பிளை வேதனை

654

கேரளாவில் முஸ்லீம் பெண்ணும், கிறிஸ்தவ ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹிரிசனுக்கும், முஸ்லீம் மதத்தை சேர்ந்த சஹானாவிற்கும் கடந்த திங்களன்று திருமணம் நடந்தது.

இவர்கள் தங்களது புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதையடுத்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என தம்பதியினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

என்னுடைய பெற்றோர்களையும் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எங்களுடன் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். எங்களால் காவல் நிலையமும் செல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை என ஹிரிசன் கூறியுள்ளார்.

மனைவி சஹானா கூறியதாவது, என்னுடைய குடும்பத்தார் எங்களையும், என்னுடைய கணவர் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். நான் ஒரு முஸ்லீம், என்னுடைய கணவர் கிறிஸ்தவர், நாங்கள் இருவரும் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் வலியுறுத்தவில்லை.

நான் என்னுடைய கணவருடன் வாழ வேண்டும், உயிரிழக்க விரும்பவில்லை. எங்களை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? எங்களுடைய உறவு மற்றும் திருமணத்தின் போதும் நாங்கள் மதம் மற்றும் ஜாதி பற்றி எதுவும் நினைத்தது கிடையாது என உருக்கமாக கூறியுள்ளார்.