காலேஜ் பட்டம் பெற்ற பூனை.. இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ : பின்னணி என்ன??

334

காலேஜ் பட்டம் பெற்ற பூனை..

அடிக்கடி இணையத்தில் ஏராளமான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், வைரலாகி வரும் நிலையில், தற்போது பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று, நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி இருந்தது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் வந்தனர். இது ஒருபுறம் இருக்க, பேரிடர் காலம் என்பதால் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கிப் போயினர்.

இதன் பெயரில், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் வீட்டில் இருந்த படி, தங்களின் படிப்பு மற்றும் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனால், ஆன்லைன் வழி கல்வி கற்றலும், உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. மேலும், தேர்வுகளை கூட மாணவ மாணவிகள், வீட்டில் இருந்த படி எழுதி வந்தனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை முடித்த நிலையில், அந்த பெண்ணுடன் சேர்ந்து அவரது பூனையும் சேர்த்து பட்டம் வென்றுள்ளது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Francesca Bourdier என்ற பெண் ஒருவர், University of Texas-ல் பட்டம் பெற்றுள்ளார். அவருடன் அவரது பூனையான Suki-யும் பட்டம் பெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் Francesca பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள Francesca, “ஆம், எனது பூனையும் என்னுடன் சேர்ந்து, ஒரு ஆன்லைன் வகுப்பினைக் கூட தவற விடாமல், அனைத்திலும் கலந்து கொண்டது. இதனால், ஆஸ்டினிலுள்ள University of Texas-ல் இருந்து நாங்கள் இருவரும் பட்டம் பெற்றுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவுகளைக் காணும் பலரும், பூனை மற்றும் அதன் உரிமையாளருக்கும் சேர்த்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, பூனைக்கு பொருந்தும் வகையில், அது அணிந்துள்ள சிறிய மாடல் பட்டமளிப்பு ஆடைகளுடன், க்யூட்டாக பூனை இருப்பது குறித்தும், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.