பணமழை

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எதிர்பார்க்காத பணத்தை சம்பாதித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 21 வயதான Kayla Woods. சாதாரணமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த Kayla-விற்கு ஒரு மகள் உள்ளார்.

தன்னுடைய குடும்பத்தை நடத்தவும், குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் Kayla-விற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் டேட்டிங் இணையதளத்தில் பதிவு செய்து, சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.

அப்படி Kayla உடன் டேட்டிங் செய்த ஒரு நபர், புகைப்படங்கள் வேண்டும் என கூறியுள்ளார். உடனே Kayla-வும் அதிகமாக செல்பி புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு கால் பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார்.

தன்னுடைய கால் மோசமான, பயங்கரமான மற்றும் அசிங்கமானது என நினைத்திருந்த Kayla-விற்கு அன்று தான் அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது.

புகைப்படங்களை பார்த்த அந்த நபர், கால் மிகவும் அழகாக இருக்கிறது எனக்கூறி பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தன்னுடைய கால் பாதத்தை, வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து ஆன்லைனில் அதிகம் பதிவிட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். இந்த புகைப்படங்கள் மூலம் மட்டும் Kayla இந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு குறைந்தபட்சம் £2,000 பவுண்டுகள் வரை சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.